இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Jan 2025 4:40 AM
தமிழக சட்டசபையில் உரையாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசும்போது, கவர்னர் திட்டமிட்டு விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார். கவர்னர் செயலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அவையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசி வருகிறார். அவர் பேசும்போது, வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்கும். மகளிருக்கான கட்டணமில்லா பஸ்சை ஸ்டாலின் பஸ் என்றே பெயர் வைத்து விட்டனர். நான் செல்ல கூடிய இடங்களில் மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி என்றும் கூறியுள்ளார்.
- 11 Jan 2025 3:55 AM
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததும், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.
- 11 Jan 2025 3:45 AM
மெட்டாவுக்கு 72 மணிநேர காலக்கெடு விதித்த பிரேசில்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான மெட்டா நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது.
இந்த சூழலில், உண்மை கண்டறியும் நடைமுறையில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகள் கைவிடப்படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி கோரி மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக 72 மணிநேர காலக்கெடுவும் விதித்துள்ளது.