ஏமன் கடற்கரை அருகே படகு கவிழந்து 13 அகதிகள் பலி


ஏமன் கடற்கரை அருகே படகு கவிழந்து 13 அகதிகள் பலி
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 25 Aug 2024 1:28 PM GMT (Updated: 26 Aug 2024 12:01 PM GMT)

ஏமன் கடற்கரை அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

சனா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி அகதிகளாக செல்கின்றனர். ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையிலும், அங்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எத்தியோப்பியாவில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று ஏமன் கடற்கரை அருகே எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 27 பேர் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 14 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக ஐ.நா. புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story