நேபாளத்தில் விமான விபத்து.. 18 பேர் பலி


நேபாளத்தில் விமான விபத்து
x
தினத்தந்தி 24 July 2024 6:33 AM GMT (Updated: 24 July 2024 7:52 AM GMT)

நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

காத்மாண்டு,

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில் 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது (டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த உடன் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பலியாகினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பைலட், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.


Next Story