100 வயதில் திருமணம்; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த திருமண ஜோடி


100 வயதில் திருமணம்; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த திருமண ஜோடி
x

100 வயதான பெர்னி லிட்மேன் என்பவர் 102 வயதான மாஜோரி பிடர்மேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிலடெல்பியா,

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரை சேர்ந்த 100 வயதான பெர்னி லிட்மேன் என்பவர் 102 வயதான மாஜோரி பிடர்மேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பிலடெல்பியாவில் உள்ள ஒரு மூத்த குடிமகன்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விருந்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. 9 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் கடந்த மே மாதம் 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தின் போது பொனியின் பின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர். தற்போது இவர்களின் சேர்ந்த குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.

தற்போது இவர்களின் திருமணம் உலகில் மிக வயதான திருமண ஜோடி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதையடுத்து அந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story