இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், படகு ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மாகாண தலைநகரான அம்பன் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டது என்றார்.
Related Tags :
Next Story