லெபனானில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு


லெபனானில்  உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு
x
தினத்தந்தி 26 Sept 2024 12:09 AM IST (Updated: 26 Sept 2024 2:38 PM IST)
t-max-icont-min-icon

இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் கடந்த சில நாள்களுக்கு முன்பு இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சிறாா்கள், பெண்கள் உள்பட 564 போ் உயிரிழந்தனா்; 1,645-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் இன்று 51 பேர் உயிரிழந்தனர். 233 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசித்துவரும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. லெபனானில் உள்ள இந்தியர்கள் கட்டாயம் அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களுக்காக லெபனானில் தங்கியிருப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

cons.beirut@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அவசர கால தொலைபேசி எண்ணான +96176860128 என்ற எண்ணிலும் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story