மலேசியாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

Photo Credit: AFP
மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோலாலம்பூர்,
மலேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மலேசியாவில் உள்ள பார்னேவில் பெய்து வரும் தொடர் மழையால், குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள ஏற்பட்டுள்ளன. நேற்று வரையில் இந்த கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இன்றும் கனமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story