மாஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷியாவின் அணு ஆயுதப்படைகளின் தலைவர் பலி
மாஸ்கோவில் நடந்த வெடிவிபத்து குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரஷிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்தது. இதில் ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்புப்படைகளில் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதாக ரஷியாவின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்த மற்றொருவர், கிரில்லோவின் உதவியாளர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கிரில்லொவ் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story