ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு இன்று அடையாள இறுதி சடங்கு


ஹிஸ்புல்லா அமைப்பின்  தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு  இன்று அடையாள இறுதி சடங்கு
x
தினத்தந்தி 4 Oct 2024 9:28 AM IST (Updated: 4 Oct 2024 10:43 AM IST)
t-max-icont-min-icon

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது.

பெய்ரூட்:

இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ரல்லா சடங்கு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர், இஸ்ரேல் - ஹிஸ்புல்லாவுக்கு இடையேயான மோதலாக வெடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் கடந்த 27-ம் தேதி லெபனானில் தாஹியாக் நகரில் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது.

இதில்,ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இன்று மத்திய பெய்ரூட் நகர் கர்பல்லாவில் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடையாள இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஈரானில் இருந்தபடி பிரார்த்தனை செய்ய உள்ளார்


Next Story