செனட் சபையில் பெற்றோரை 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என்று கூறி வரவேற்ற எப்.பி.ஐ. இயக்குநர்

எப்.பி.ஐ. இயக்குநர் காஷ்யப் பட்டேல் செனட் சபையில் தனது பெற்றோரை ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று கூறி வரவேற்றார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்றார். அவரது மந்திரிசபை மற்றும் வெள்ளை மாளிகையின் பல்வேறு உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் என்பவரை டிரம்ப் நியமனம் செய்தார்.
டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான காஷ்யப் பட்டேலை எப்.பி.ஐ. இயக்குநராக நியமிக்கும் பரிந்துரையை உறுதிப்படுத்துவதற்கான செனட் உறுப்பினர்களின் விசாரணை நடைபெற்றது. அப்போது செனட் சபைக்கு வந்த தனது பெற்றோரை 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என்று கூறி வரவேற்ற காஷ்யப் பட்டேல், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story