இஸ்ரேலுக்கு உதவி செய்கிறதா எகிப்து? வலைத்தள தகவலுக்கு ராணுவம் மறுப்பு


ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு உதவி செய்கிறதா எகிப்து: வலைத்தள தகவலுக்கு ராணுவம் மறுப்பு
x
தினத்தந்தி 1 Nov 2024 12:47 PM IST (Updated: 1 Nov 2024 5:05 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேலுடன் எந்த விதமான ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கெய்ரோ:

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக எகிப்து ராணுவம் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் ஆயுத தொழிற்சாலைக்கு தேவையான சுமார் 1,50,000 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட 8 கண்டெய்னர்களுடன் எம்.பி.கேத்ரின் என்ற ஜெர்மன் கப்பல் எகிப்தின் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திற்கு வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது எகிப்து ராணுவத்தின் கவனத்திற்கு வர, உடனடியாக அந்த தகவலை மறுத்துள்ளது. இஸ்ரேலுடன் எந்த விதமான ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக உயர்மட்ட ஆதாரத்தை மேற்கோள் காட்டி, எகிப்தின் பத்திரிகை மையமும் அந்த தகவலை நிராகரித்தது. பாலஸ்தீன மக்களுக்கு எகிப்து அளிக்கும் ஆதரவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு எதிரான நபர்களால் இதுபோன்ற செய்திகள் பரப்பப்பட்டதாக பத்திரிகை மையம் கூறி உள்ளது.


Next Story