பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூமியில் இருந்து 98 கிலோமீட்டர் ஆழத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், ஸ்வாட், மலகாண்ட், வடக்கு வஜிரிஸ்தான், பராச்சினார், லோயர் டிர், ஹங்கு, சர்சத்தா மற்றும் ஸ்வாபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் கராச்சியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட தீவிர நிலநடுக்கத்தால் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.