இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை
எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ஜகார்த்தா,
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.
இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Related Tags :
Next Story