நடுவானில் விமானங்கள் மோதி விபத்து - 3 பேர் பலி
நடுவானில் சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று மதியம் ஜபிரு ரக சிறிய விமானமும், செஸ்னா 182 ரக சிறிய விமானமும் வானில் பறந்துகொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் நடுவானில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story