காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
x

கோப்புப்படம்

தமிழகத்தில் காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இதனால் இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக நாளை, நாளை மறுதினம் மற்றும் 28-ந்தேதி கடலூர் முதல் டெல்டா வரை கன முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களின் கடல் பகுதிகளில் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story