சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடக்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், மாம்பலம், கிண்டி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது.


Next Story