தமிழகத்தில் 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story