பிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story