10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story