தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்;
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கண்ட மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.