வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Live Updates
- 27 Nov 2024 11:18 AM IST
நாகப்பட்டினத்தில் அதிக மழைப்பொழிவு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கண்ணியில் தலா 18. செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
மிக கனமழை பதிவான இடங்கள்
நாகை - 19. செ.மீ
வேளாங்கண்ணி - 17.7. செ.மீ
மணலி (சென்னை) - 13.4 செ.மீ
திருக்குவளை (நாகை) - 12.5 செ.மீ
திருவாரூர் 12.2 செ.மீ
வேதாரண்யம் (நாகை) - 12.1 செ.மீ
- 27 Nov 2024 11:12 AM IST
புயல் சின்னம் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், கடலில் ஆபத்தான பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்படும் மிதவை ஒன்று, சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று கரை ஒதுங்கியது.
- 27 Nov 2024 11:10 AM IST
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.