8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகிற நவம்பர் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story