சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Dec 2024 10:29 AM IST (Updated: 25 Dec 2024 11:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 30-ந் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.


Next Story