4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆந்திர - வடதமிழகம் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகரும்போது நாளை (டிச., 24-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (25-ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story