இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாளை மறுநாள் நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நகர்ந்து வந்து 23, 24-ந்தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது. இந்த நிகழ்வால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி , சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .