அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த மணி 3 நேரத்தில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , கடலூர், தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story