ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது


ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2024 12:52 PM IST (Updated: 24 Nov 2024 12:59 PM IST)
t-max-icont-min-icon

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் அருகே ஒரு தோப்பில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் திருமேனி என்பவர், தோப்பில் சிறுமி தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதை கண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி அலறியபடி அப்பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறி கதறி அழுதார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திருமேனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story