எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..? வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக வருகிற 23-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் தூத்துக்குடி, தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை எதிரொலியாக நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை எதிரொலியாக தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
* புதுச்சேரி: கனமழை எதிரொலியாக காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை காரணமாக திருவாரூரில் பள்ளி மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
* கன்னியாகுமரி : பேச்சிப்பாறை பகுதிகளை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
* விருதுநகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
* தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.