த.வெ.க. மாநாட்டில் என்ன பேசப்போகிறார் விஜய்?


த.வெ.க. மாநாட்டில் என்ன பேசப்போகிறார் விஜய்?
x

கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி பெரியார் கருத்துக்களை முன்மொழியும் விதமாக பெண் விடுதலை , பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது . தனிமனித உரிமையின் முக்கியத்துவம் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை அவர்களின் மேம்பாடு ஆகியவை குறித்தும் விஜய் பேசுவார் என கூறப்படுகிறது . ஊழலுக்கு எதிராக விஜய் அதிகம் பேசுவார் எனவும் கூறப்படுகிறது . மாணவர்கள், இளைஞர்கள் பொதுவாழ்க்கையில் இருக்க வேண்டிய அவசியம் தேவை குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story