விக்கிரவாண்டியில் விதைத்தது... பரந்தூரில் வெடித்தது... பூஞ்சேரியில் பூத்தது: மருது அழகுராஜ்

விக்கிரவாண்டியில் விதைத்தது... பரந்தூரில் வெடித்தது... பூஞ்சேரியில் பூத்தது என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கிறார். இதற்கிடையே, கடந்த சில நாளாக விஜயைப் புகழ்ந்து வரும் மருது அழகுராஜ் விரைவில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இந்த விழா குறித்து மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
"#சபாஷ்விஜய் விக்கிரவாண்டியில் விதைத்தது... பரந்தூரில் வெடித்தது... பூஞ்சேரியில் பூத்தது. நாளை பூத்களில் யூத்-களாய் காய்த்து; அது புனிதஜார்ஜ் கோட்டையில் கனியட்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் தொல்லிணக்கன தத்துவத்தை பொய்க்காது காக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.