'அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்' - விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு


அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் - விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு
x

அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சகோதரர் விஜய் அரசியல் பயணத்தில் நுழைந்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது, நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யும் இந்த பாதையில் சென்றுதான் ஆக வேண்டும்.

அவர் வேறு ஒரு துறையில் சாதனை படைத்துவிட்டு அரசியல் துறைக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் வந்த உடனேயே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடும் என்று சொல்லமுடியாது. எனவே, விஜய் தனது பயணத்தில் எல்லாவற்றையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

எங்கள் பாதை தனி மனிதரை சார்ந்தது கிடையாது. அரசியல் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பயணம் செய்கிறோம். எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. 2026-ல் மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து எங்களை ஆட்சிக்கு அழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.


Next Story