நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை


நீர்வரத்து அதிகரிப்பு:  ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை
x

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தர்மபுரி,

ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது .ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கன்டி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது உயர்ந்துள்ளது

இந்த நிலையில் , நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Next Story