மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2024 8:11 PM IST (Updated: 14 Dec 2024 10:41 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் ,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 35 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

அந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரியாக திறந்து விடப்படுகிறது. நீர்திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், கொள்ளிடம் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story