"பிற மாநிலங்களை விஜய் பார்க்க வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி
மற்ற மாநிலங்களுக்கு சென்று பெண்களின் நிலைமை குறித்து விஜய் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று கோரிக்கை மனுவை அளித்தார். விஜய் கவர்னரிடம் அளித்த அந்த மனுவில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் விஜய்க்கு ஆதரவாக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று பெண்களின் நிலைமை குறித்து விஜய் பார்த்துவிட்டு வந்து தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறட்டும்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story