பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் திட்டம்?
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய், பரந்தூருக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் அவர் மக்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பாதுகாப்பு கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு விஜய் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கியதை தொடர்ந்து முதல்முறையாக போராட்ட களத்திற்கு விஜய்செல்ல உள்ளார்
Related Tags :
Next Story