கவர்னர் ஆர்.என்.ரவியுடன் விஜய் சந்திப்பு


Vijay meets Governor R.N. Ravi
x
தினத்தந்தி 30 Dec 2024 1:00 PM IST (Updated: 30 Dec 2024 1:47 PM IST)
t-max-icont-min-icon

கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை விஜய் கொடுக்க உள்ளதாக தெரிகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் என்று இன்று காலை தனது கைப்பட கடிதம் எழுதியிருந்தநிலையில் தற்போது கவர்னர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.

விஜய் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்திருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திப்புக்கு பின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story