வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்


வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்
x
தினத்தந்தி 3 Jan 2025 2:36 PM IST (Updated: 3 Jan 2025 5:12 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைபோல ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் [1730 -1796]. அவரது 295-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்களாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க" என்று தெரிவித்துள்ளார்.


Next Story