டாக்டர்கள், சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம் - கவர்னர் ஆர்.என்.ரவி


டாக்டர்கள், சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம் - கவர்னர் ஆர்.என்.ரவி
x

கோப்புப்படம் 

டாக்டர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டாக்டர்கள், சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. டாக்டர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். டாக்டர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story