திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுகிறது - எடப்பாடி பழனிசாமி
மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் கடந்த 02.09.2024 அன்று திறக்கப்பட்டது, காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது .
இந்த திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டபடுகிற பாலங்களை , மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.