சென்னை புத்தக கண்காட்சியில் த.வெ.க. சார்பில் புத்தகங்கள் தானம்


சென்னை புத்தக கண்காட்சியில் த.வெ.க. சார்பில் புத்தகங்கள் தானம்
x

புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி நடைபெற்று பெற்று வருகிறது. புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் பல்வேறு புத்தகங்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புத்தகங்களை தானம் செய்தார்.


Next Story