விழுப்புரத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து
விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே யூனிட் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற யூனிட் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருந்த நிலையில் 6-வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் விபத்து காரணமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story