இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 March 2025 9:24 AM
மியான்மார், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்திற்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையான உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- 28 March 2025 9:21 AM
நிலநடுக்கத்தால் நாடு முழுவடும் விமான சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தாய்லாந்து அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மியான்மரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.
- 28 March 2025 8:17 AM
மியான்மரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாண்டலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் குலுங்கியது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகள் பயந்துபோய் தரையில் அமர்ந்துவிட்டனர்.
- 28 March 2025 7:29 AM
மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்.. தரைமட்டமான கட்டிடங்கள்
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிடங்கள் இடிந்த விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
- 28 March 2025 5:35 AM
குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம்: ஆக்கப்பூர்வமான அரசியலை செய்ய முன்வாருங்கள்; தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சட்ட சபை விதிகளை கடைபிடியுங்கள்; கவன ஈர்ப்புக்கு முறையான அனுமதி பெற வேண்டும்: காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு
- 28 March 2025 5:29 AM
வீராணம் ஏரியில் படகு இல்லம்?
வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி வீராணம் ஏரி சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் கந்தகுமரம் பகுதியில் படகு இல்லம் அமைக்கும் பணி இந்தாண்டு பணிகள் தொடங்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை என்று பதில் அளித்தார்.
- 28 March 2025 5:27 AM
தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தர்வு: தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
- 28 March 2025 5:26 AM
- மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
- கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால்மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் - அவை முன்னவர்
- துரைமுருகன்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்குஎடுத்து கொள்ளப்படாது - சபாநாயகர் அப்பாவு
- கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம், அமளி