இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
x
தினத்தந்தி 27 Feb 2025 3:43 AM (Updated: 28 Feb 2025 3:16 AM)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 27 Feb 2025 2:24 PM

    குஜராத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் ஆமதாபாத் நகருக்கு இன்று மாலை வந்தடைந்து உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

  • 27 Feb 2025 1:53 PM

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அமித்ஷா பேசுவது எதுவும் நம்பகத்தன்மையோடு இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

  • 27 Feb 2025 1:51 PM

    டெல்லி சட்டசபையின் துணை சபாநாயகராக 6 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான மோகன் சிங் பிஸ்த் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

  • 27 Feb 2025 1:22 PM

    கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்; மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக பார்த்து சிகிச்சை அளியுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  • 27 Feb 2025 1:20 PM

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கயல்விழி ஆலோசனை நடத்தி வருகிறார்.

  • 27 Feb 2025 1:04 PM

    சென்னை கொளத்தூரில் நடந்த பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் தரப்படும் என இன்று அறிவித்து உள்ளார்.

  • 27 Feb 2025 12:20 PM

    திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு முன் பாமக- விசிகவினர் மோதலில் ஈடுபட்டனர். அங்காளம்மன் கோவில் - மயானக் கொள்ளை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தில் விசிகவினர் சிலர் வேலில் கட்சி கொடியை கட்டி நடனமாடியுள்ளனர் அதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

  • 27 Feb 2025 12:20 PM

    நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

  • 27 Feb 2025 12:08 PM

    ஈரோட்டில் இன்று 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். கானல் நீருடன் அனல் பறக்கும் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.

  • 27 Feb 2025 12:06 PM

    நாம் தமிழர் கட்சியின் தருமபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


Next Story