இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 March 2025 9:35 AM
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அடுத்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நடைபெறும்.
தெலுங்கானாவின் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற வேண்டும் என விருப்பம் தெரிவித்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவித்து உள்ளார்.
- 22 March 2025 9:05 AM
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கடல் முள்ளெலிகளில் இருக்கும் சிறிய, கூர்மையான முட்கள் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மீது குத்தி அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
- 22 March 2025 7:25 AM
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 22 March 2025 6:51 AM
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், “பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு என்பது எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.
- 22 March 2025 5:13 AM
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இந்தியாவுக்காக நாம் ஓரணியில் திரண்டுள்ளோம். கூட்டாட்சித்தன்மைக்கு வந்துள்ள ஆபத்தை உணர்ந்து நாம் இங்கு கூடியுள்ளோம். இந்திய ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பு இது’ என்றார்.
- 22 March 2025 5:09 AM
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, முதல்-அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு மூலம் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒருங்கிணைவோம். நியாயமான மறுசீரமைப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுப்பட்ட அனைத்து முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களையும், இந்த கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
- 22 March 2025 4:11 AM
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதன்படி பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
- 22 March 2025 3:16 AM
பா.ஜ.க. கருப்புக்கொடி போராட்டம்
தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று காலை 10 மணிக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
- 22 March 2025 2:46 AM
காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து