இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Dec 2024 11:23 AM IST
அம்பேத்கரை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்ச்சையாக பேசினார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தெரிவித்து தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- 18 Dec 2024 11:17 AM IST
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.