இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Feb 2025 10:51 AM
திண்டுக்கல், பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 11 Feb 2025 9:59 AM
சென்னை நீலாங்கரை இல்லத்தில் தவெக தலைவர் விஜய்யை மீண்டும் சந்திக்கிறார் பிரசாந்த் கிஷோர். பனையூரில் தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 11 Feb 2025 8:56 AM
திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார்.
- 11 Feb 2025 8:54 AM
ரெயிலில் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் 'பெண் குழந்தையைக் காப்போம்' திட்டத்தின் பயன் என்ன? ரெயில்வே துறை மந்திரி பதிலளிக்க வேண்டும். ரெயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையொட்டி மக்களவையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
- 11 Feb 2025 5:41 AM
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மிரட்டல், பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து, நவீன ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.
- 11 Feb 2025 4:49 AM
திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு வழி ரெயில் பாதையில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னாள் ஊழியர் ஒருவர் பார்த்து ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
ரெயில் சென்றால் விபத்து ஏற்படும் என்ற சூழலில், எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.