இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Feb 2025 10:02 AM
சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் பெல்ட் ஏரியாவில் வசிப்பவருக்கும் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.
- 10 Feb 2025 9:59 AM
தனது ஓட்டுநர் உரிமத்தை தரக்கோரி தென்காசியில் போக்குவரத்து துறை அதிகாரியை கண்டித்து செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 10 Feb 2025 9:56 AM
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி வருகிறார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 Feb 2025 9:12 AM
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் மருத்துவக் கழிவு கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.
- 10 Feb 2025 9:09 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். கணக்கெடுப்பு நடத்த கோரி இம்மாதத்திற்குள் சென்னையில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். பின்தங்கிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
- 10 Feb 2025 9:06 AM
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Feb 2025 8:44 AM
நாளை தைப்பூச திருவிழா: மதுரை - பழனி சிறப்பு ரெயில் இயக்கம்
மதுரையில் நாளை காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 11.30க்கு பழனி சென்றடையும். மறுமார்க்கமாக பழனியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 5.45க்கு மதுரை வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே தெரித்துள்ளது.
மேலும் சிறப்பு ரெயில் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- 10 Feb 2025 7:32 AM
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு: சீமானுக்கு சம்மன்
இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டிற்கு காவல்துறையினர் நேரில் சென்று சம்மன் வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Feb 2025 7:21 AM
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய தமிழ்நாடு வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அவரது பெற்றோர் முதல்-அமைச்சரிடம் இருந்து அதற்கான காசோலையை பெற்றுக்கொண்டனர்.