இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 March 2025 2:00 PM
திருத்தணி அருகே அரசுப்பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்- எடப்பாடி பழனிசாமி
- 7 March 2025 1:45 PM
நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி“என்னுடைய அன்பான அழைப்பை ஏற்று இஸ்லாமிய மக்கள் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது - விஜய்
- 7 March 2025 11:51 AM
சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்
சுமார் 2,000 பேர் பங்கேற்று சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி, நோன்பு கஞ்சி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- 7 March 2025 10:20 AM
சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் வீட்டின் பணியாளர் இருவரின் ஜாமின் மனுக்களும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ரத்தான நிலையில், ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
கைதான அமல்ராஜ், சுபாகர் இருவர் மீதும் ஆயுத தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது