இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025
x
தினத்தந்தி 1 Feb 2025 3:53 AM (Updated: 1 Feb 2025 2:40 PM)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 1 Feb 2025 1:24 PM

    முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, 79, உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் காலமானார்.

  • 1 Feb 2025 11:59 AM

    மகா கும்பமேளாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

  • 1 Feb 2025 11:53 AM

    *சென்னை ஈசிஆர் விவகாரத்தில் கைதான சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளர்.

    *அதிமுகவினர் செய்யும் தவறுகளுக்கு திமுகவினர் மீது பழி சுமத்துகிறார்கள் என்றும் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

  • 1 Feb 2025 11:34 AM

    சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

  • 1 Feb 2025 11:01 AM



  • 1 Feb 2025 10:56 AM

    மக்களின் கோரிக்கையை ஏற்று வருமான வரி எளிதாக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான பட்ஜெட்: கிராமப்புறங்கள், நகர்புறங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் திட்டங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

  • 1 Feb 2025 10:27 AM

    வேங்கை வயல் - பிப்.3ம் தேதி தீர்ப்பு

    வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிப்.3ம் தேதி தீர்ப்பு -புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

  • 1 Feb 2025 10:21 AM

    பட்ஜெட் குறித்து அன்புமணி கருத்து

    2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமானவரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதில் மகிழ்ச்சி

    தமிழ்நாட்டிற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்


Next Story