இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
Live Updates
- 16 Dec 2024 11:54 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மு.க ஸ்டாலின் எதிர்ப்பு
"கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு நாடு ஒரு தேர்தல் முறையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத் தன்மையையும் கொன்று அதிபர் ஆட்சி முறைக்கு இத்திட்டம் வழிவகுக்கும்- மு.க.ஸ்டாலின்
- 16 Dec 2024 10:49 AM IST
சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட ஏற்பாடு
விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- 16 Dec 2024 10:45 AM IST
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை!
- 16 Dec 2024 10:41 AM IST
தூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
- 16 Dec 2024 10:35 AM IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்...?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.